SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காடையாம்பட்டி அருகே சிதிலமடைந்த பள்ளி கட்டடம் சீரமைக்கப்படுமா?

6/13/2018 1:39:52 AM

காடையாம்பட்டி, ஜூன் 13:   காடையாம்பட்டி அருகே தும்பிபாடி ஊராட்சி ரெட்டியூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 1933ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பழமையான பள்ளியாகும். இப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்த நிலையில், ஒவ்வொரு கட்டடமாக பழுதடைந்து இடிக்கப்பட்டுள்ளது. தற்போது 2 ஓட்டு கட்டடம் மட்டுமே உள்ளது. தற்போது இக்கட்டடத்தின் ஓடுகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டட வசதி, மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், சேர்க்கை சதவீதம் குறைந்து தற்போது 133 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட 5 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.  மேலும், இரண்டு மற்றும் மூன்று வகுப்புகள் ஒன்றாக ஒரே கட்டடத்தில் படிக்க வைப்பதால்,  மாணவ மாணவிகள் சரியாக படிக்க முடியாமல் அவதிப்பட்டு தாழ்வாரப் பகுதியிலும்,  மரத்தடியிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். மழை காலங்களில் தண்ணீர் ஒழுகுவதால்  மாணவ, மாணவிகள் நனைகின்றனர். கடந்த 4 ஆண்டுக்கு முன் இடிக்கப்பட்டு, இதுவரை  புதிய கட்டடம் கட்டாமல் இடிந்து விழுந்து வருகிறது.  எனவே சிதிலமடைந்து கிடக்கும் பள்ளி கட்டடத்தை இடித்து, புதிதாக கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்