SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் குழந்தையை கடத்த வந்ததாக வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

6/13/2018 1:39:40 AM

ஆத்தூர், ஜூன் 13:  பெரம்பலூர் மாவட்டம் இறையூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் அசோக்ராஜ்(27). இவர் நேற்று முன்தினம், தனது தாய் கமிலாவை காணவில்லை என தேடிக்கு வீரகனூர் வழியாக டூவீலரில் ஆத்தூருக்கு வந்தார். அப்போது ஆத்தூருக்கு செல்ல வழி தெரியாததால் நடுவலூர், பள்ளக்காடு பகுதியில் டூவீலரை நிறுத்தி வழி கேட்டு வந்தார். இதனால், இவரை குழந்தைகளை கடத்த வந்தவர் என கருதிய பள்ளக்காட்டை சேர்ந்த தர்மலிங்கம் (32), காங்கமுத்து (24) ஆகிய இருவரும், அவரது வாகனத்தை பின் தொடர்ந்து ஆத்தூர் வரை வந்தனர். ஆத்தூர் சாரதா ரவுண்டனா அருகில், அசோக்ராஜ் அங்கிருந்தவர்களிடம் சேலம் செல்வதற்கு வழி கேட்ட போது, இருவரும் அவரை தாக்க துவங்கினார்கள். இதனால் அங்கு கூட்டம் கூடியது.
 அப்போது, அசோக்ராஜ் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவன் என அவர்கள் கூறியதால், வேடிக்கை பார்த்தவர்கள் அனைவரும் அசோக்ராஜை தாக்கினார்கள். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் போலீசார், பொதுமக்களின் தாக்குதலிருந்து அசோக்ராஜை மீட்டு தர்மலிங்கம், காங்கமுத்து ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு சென்ற தாயை தேடி, டூவீலரில் வந்த அசோக்ராஜை தர்மலிங்கம் மற்றும் காங்கமுத்து ஆகியோர் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து, பொதுமக்களிடம் தவறான வதந்தி பரவவிட்டு அப்பாவி வாலிபரை தாக்கியதாக, இருவரையும் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்