SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாம்பலம் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு :

6/13/2018 12:59:15 AM

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி கலா(53). தம்பதி, உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க  கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றனர். நேற்று முன்தினம் காலை அங்கிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை  புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு மாம்பலம் ரயில் நிலைய பிளாட்பாரத்தை ரயில் நெருங்கும்போது, ரயிலில் ஏறிய ஒரு வாலிபர், கலா கழுத்தில்  கிடந்த 5 பவுன் மதிப்புள்ள 2 தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதில் கலாவின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து  சக பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, படுகாயமடைந்த கலா அருகில் உள்ள ஒரு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
* வண்டலூர்  - ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் நேற்று முன்தினம்  சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்  கிடந்தது. தாம்பரம் ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து, இறந்த  நபர் யார் என விசாரித்து வருகின்றனர்.
* திருவொற்றியூர்  ராஜாஜி நகரை சேர்ந்த கணேசன் (52) என்பவர், கடந்த 3 நாட்களுக்கு முன்  வீட்டின் அருகே நடந்து சென்றபோது, 5 பேர் அவரை  கத்தியால் குத்திவிட்டு,  ரூ.2,500, செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். சாத்தங்காடு போலீசார்  விசாரணையில், திருவொற்றியூர் ராஜி நகரை  சேர்ந்த மணி (21), பார்த்தீபன் (22)  ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.
* மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் 2வது தெருவை சேர்ந்த கவுரி (50) என்பவர், நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே நடந்து சென்றபோது,  பைக்கில் வந்த 2 பேர், கவுரி கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* வியாசர்பாடியை  சேர்ந்த பால்ராஜ் ஆரோக்யசாமி (30) என்பவர் நேற்று மதியம் வீட்டின் அருகே  நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவர் அவரிடம்  இருந்த செல்போனை பறித்து  சென்றுள்ளார். புளியந்தோப்பு போலீசார் விசாரணையில், வியாசர்பாடி,  சி-கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்த சுறா  என்ற சுரேஷ்குமார் (23) செல்போன்  பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
* வியாசர்பாடி,  உதயசூரியன் நகர் 8வது பிளாக்கை சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). இவர் நேற்று  காலை பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் நடந்து  சென்றபோது, மர்ம நபர்  ஒருவர் இவரை மிரட்டி ரூ.2300 பறித்து சென்றுள்ளார். போலீசார் விசாரணையில்,  புளியந்தோப்பு கன்னிகாபுரம் திரு.வி.க  நகர் 3வது தெருவை சேர்ந்த பழைய  குற்றவாளி ராசாத்தி என்கிற இளம்பரிதி (36) வழிப்பறியில் ஈடுபட்டது  தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
* புளியந்தோப்பு  பி.கே.காலனி 3வது பிளாக் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற நொண்டி சுரேஷ் (35)  தொடர்ச்சியாக வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு  வந்தார். இவர் மீது ஒரு கொலை  வழக்கு, 10 கொலை முயற்சி வழக்கு உட்பட 54 வழக்குகள் உள்ளன. 7 முறை குண்டர்  சட்டத்தில் கைது  செய்யபட்டு சிறை சென்றுள்ள இவர் தற்போது வழக்கு  விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில்,  வியாசர்பாடி  ரயில்வே பகுதியில் பதுங்கியிருந்த சுரேசை போலீசார் நேற்று கைது  செய்தனர்.
* ஆவடி அயப்பாக்கம் பகுதியில், திருமணம் செய்வதாக ஆசை காட்டி 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக  பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,ஆதம்பாக்கத்தை சேர்ந்த டேவிட் மங்கள்ராஜ் (29) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளையன் பிடிபட்டார்

 பெரம்பூர் அடுத்த திருவிக நகர், வெற்றி நகரை சேர்ந்தவர் அறிவழன் (52). நேற்று மதியம் இவரது மனைவி ஹேமா துணி துவைக்க கதவை  சாத்திவிட்டு பின்பக்கம் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது மர்ம ஆசாமி, வீடு புகுந்து பீரோவை உடைத்து 12 சவரன் நகையை  கொள்ளையடித்தது தெரிந்தது. புகாரின்பேரில் திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து வீட்டில் வசிக்கும்   டிரைவர் இளமதி (32) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது  செய்தனர். அவரிடம் இருந்து 12 சவரன் நகை பறிமுதல் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KiteWarPalestine

  பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

 • ranirashmiindianship

  இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

 • kashmirkheerbhavanifstvl

  காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

 • MexicanChildrenAmerica

  2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

 • 19-06-2018

  19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்