SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதவரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணிகள் அவதி

6/13/2018 12:59:00 AM

மாதவரம்: மாதவரம் காவல் நிலையம் அருகே பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, மாதவரம் காவல் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து சுற்று வட்டார பகுதியை  சேர்ந்த பொதுமக்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் தினமும் பெரம்பூர், வியாசார்பாடி, மணலி, செங்குன்றம் உள்பட பல  பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் மூலம் சென்று வருகின்றனர்.

இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், வெயில் மற்றும் மழை காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். பெண்கள் மற்றும்  முதியோர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே, இங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பஸ்  நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பயணிகள் சிரமப்படுகின்றனர்.

இதுபற்றி மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும், சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அதிகாரிகளுக்கும் பலமுறை புகார் செய்தும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது பருவ மழை துவங்கியுள்ளதால், நிழற்குடை  இல்லாமல் மழையில் நனைந்தபடி பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

  • ranirashmiindianship

    இந்திய கடலோர காவல்படையின் விரைவு ரோந்து கப்பல் 'ராணி ராஷ்மணி' விசாகபட்டினத்தில் அர்பணிப்பு

  • kashmirkheerbhavanifstvl

    காஷ்மீரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கீர் பவானி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

  • MexicanChildrenAmerica

    2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்காவை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்

  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்