SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டேங்கர் லாரி விபத்தில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு : நீதிமன்றம் உத்தரவு

6/13/2018 12:58:46 AM

சென்னை: டேங்கர் லாரி விபத்தில் உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் தனது தாய் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இவரது முதல் மகன் மணிகண்டன், தனியார்  நிறுவனத்தில் சூப்ரவைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2014ம் ஆண்டு, பணியின் காரணமாக உடன் பணியாற்றுபர்கள் 2 பேருடன்  டேங்கர் லாரியில் பயணம் செய்துள்ளார். அப்போது லாரி தரிகெட்டு ஓடி சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு மீது வேகமாக மோதி தலைகீழாக  கவிந்துள்ளது.

அதில் மணிகண்டன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மணிகண்டனின் தந்தை நாராயணன், தம்பி ராஜசேகர் ஆகியோர், லாரியின்  உரிமையாளரிடம் இருந்து இழப்பீடு வாங்கி தரும்படி சென்னையில் உள்ள வாகன விபத்துக்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் உயிரிழந்த வாலிபருக்கு 20  வயது தான் ஆகிறது. தனியார் நிறுவனத்தில் சூப்ரவைசராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்ததாக  கூறப்படுகிறது. இவரை நம்பி தான் குடும்பம் இருந்துள்ளது. எனவே மணிகண்டனின் இழப்பு குடும்பத்தினருக்கு பெரும் இழப்பு. எனவே அவரது  குடும்பத்துக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்