SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி பதிவு

5/16/2018 3:45:47 AM

ஊட்டி, மே 16: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு மற்றும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. ஊட்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பல்வேறு அரசு, வங்கி மற்றும் சிவில் சர்வீஸ் ேதர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சிகள் மூலம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

அதேபோல், திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன் பதிவு முகாம் நடந்தது. இம்முகாமில் கலந்துக் ெகாண்டவர்களுக்கு திறன் பயிற்சி குறித்து விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் கீதா பிரியா இந்த கையேடுகளை வழங்கினார். இம்முகாமில் 29 மனுதாரர்களுக்கு திறன் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்