SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் மரங்களை அகற்ற வலியுறுத்தல்

5/16/2018 3:45:37 AM

மஞ்சூர், மே.16:  மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் உள்ள அபாயகர மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது கிண்ணக்கொரை. மஞ்சூரில் இருந்து சுமார் 30கி.மீ தொலைவில் உள்ளது. இதை சுற்றிலும் 10கும் மேற்பட்ட கிராமங்களில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் தாய்சோலா பகுதியில் இருந்து கிண்ணக்கொரை வரை சுமார் 20கி.மீ துாரம் சாலை
அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ளது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான மரங்களும் வயதாகியும், பட்டுபோயும் காணப் படுகிறது. காற்று, மழை காலங்களில் இந்த மரங்கள் வேறோடு சாலையில் விழுவதால் மஞ்சூர் கிண்ணக்கொரை இடையே வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

மாற்றுப்பாதையும் இல்லாததால் சாலையில் விழும் மரங்களை அகற்றி சீரமைக்கும் வரை பொதுமக்கள், பயணிகள் திண்டாட வேண்டியுள்ளது. மேலும் தாய்சோலா கிண்ணக் கொரை இடையே பெரிய மரம் ஒன்று முறிந்து ரோட்டின் மறுபுறம் உள்ள மற்றொரு மரத்தின் மீது விழுந்தது. எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் அந்தரத்தில் அபாயகர நிலையில் தொங்கி கொண்டிருக்கும் மரத்தால் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். இதேபோல் தாய்சோலா முதல் கிண்ணக்கொரை வரை சாலையின் இருபுறங்களிலும் அபாயகர நிலையில் உள்ள மரங்கள் குறித்து ஆய்வு செய்து அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்