SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலெக்டர் துவக்கி வைத்தார் கரிகாலி கிராமத்தில்

5/16/2018 2:51:50 AM

திருச்சி, மே 16: திருச்சி மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திறன் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை  கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்து, திறன் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கினார்.  திருச்சி மாவட்டத்தில் படித்து வேலையற்ற இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் திறன் பயிற்சி குறித்த விவரங்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம்  மூலம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சென்று விளம்பரப்படுத்திட திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் இத்திறன் பயிற்சி அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு போக்குவரத்து கட்டணமாக ரூ.100 வழங்கப்படும்.

 திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விதமான திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடித்த பின்னர் அரசு சான்றிதழ் வழங்கப்படும். அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். மேலும் தனியார் துறையில் ரூ.5000க்கு மேல் மாத ஊதியம் அளிக்ககூடிய பணி நியமனம் பெற்று வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநர் அனிதா, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் சுப்ரமணியன் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்