SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கள்ளிக்குடி வணிக வளாகம் செல்ல 800 வியாபாரிகள் சம்மதம்

5/16/2018 2:51:40 AM

திருச்சி, மே.16: கள்ளிக்குடி வணிக வளாகம் செல்ல 800 வியாபாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். வரும் 20 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட இருப்பதால், திருச்சி காந்திமார்க்கெட்டில் தற்போது  உள்ள காய்கறி, பழம், மலர்கடைகள், கள்ளிக்குடியில் அமைந்துள்ள வணிக வளாகத்துக்கு ஜூன் 1ம் தேதி முதல் மாற்றப்படுகிறது. கள்ளிக்குடியில் கடைகள் வேண்டுவோர் 7முதல் 14ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட் டிருந்தது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளான நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை வியாபாரிகள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பம் பெற்று சென்றனர். ஏற்கனவே விண்ணப்பம் பெற்றவர்களும் பூர்த்தி செய்து திரும்ப அளித்தனர்.

இதில் மொத்தம் 1,638 வியாபாரிகள் பெற்றதில், 800 வியாபாரிகள் விண்ணப்பம் பூர்த்தி செய்து திரும்ப அளித்துள்ளனர். விண்ணப்பத்தை அளிக்க வரும் 20ம் தேதி வரை அவகாசம் உள்ளது. காந்திமார்க்கெட் வியாபாரிகள் புதிய மார்க்கெட்டிற்கு செல்ல மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மறுபுறம் வியாபாரிகள் அதிகளவில் விண்ணப் பித்து வருகின்றனர். விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் சிறு மற்றும் தரைக்கடை வியா பாரிகள் தான். மொத்த வியாபாரிகள் யாரும் கிடையாது என்ற கருத்தும் உள்ளது.

சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் திருச்சி சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல்  தகவல் தொடர்பியல் துறை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன்  இன்ஜினியர்ஸ் நிறுவனம் (ஐஎஸ்எப்) சார்பில் கேஆர்ஜிஐ- எம். குமாரசாமி ஆராய்ச்சி  குழு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பேராசிரியர்கள், மாணவிகள். திருச்சி,மே16: திருச்சிசமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் தகவல் தொடர்பியல் துறைமற்றும்;எலக்ட்ரானிக்ஸ் அண்ட்டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியர்ஸ் நிறுவனம்(ஐஎஸ்எப்)சார்பில் கேஆர்ஜிஐ- எம். குமாரசாமிஆராய்ச்சி குழு கருத்தரங்கம் தொடர் - 2 நடைபெற்றது. கல்லூரி நிர்வாக இயக்குநர் குப்புசாமிமற்றும் கல்லூரி முதல்வர்  சீனிவாசன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக திருச்சி  என்ஐடி பேராசிரியர் ராகவன், . பெங்களூர் கிறிஸ்ட் பல்கலைக்கழகம்  பேராசிரியர் சுகந்தி,  சிங்கப்பூர் என்டியூ ஆராய்ச்சித்துறை  குயின் சுராஜினி ராஜேந்திரன் ஆகியோர்கலந்துகொண்டனர்.

இதில் மின்னணுவியல் தகவல் தொடர்பியல் துறையைச் சேர்ந்தஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும்; கலந்துகொண்டுசெய்முறைபயிற்சியில் ஈடுபட்டு; தகவல் தொழில்நுட்பம் சார்ந்ததிறமைகளைவளர்த்துக்கொண்டனர். ஆராய்ச்சிஅறிஞர்கள் . சாமுவேல் டேனியல்,பிரவீணாமற்றும் திருச்சி என்ஐடி   அரவிந்த் குமார் ஆகியோர் கலந்துகொண்டுபொறியியல் சார்ந்தஆராய்ச்சியில் ஈடுபடுமாறுஅறிவுரைவழங்கினர். .

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan_protest123

  பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்...போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்!

 • omen_rain_fall

  ஓமன், ஏமன் நாடுகளை தாக்கிய புயலால், 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

 • ramzan_fasting123

  உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பின் புகைப்படத்தொகுப்பு!

 • tamilnaduveyilend

  தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

 • 28-05-2018

  28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்