SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடத்தி செல்ல பதுக்கி வைத்த 250 மணல் மூட்டை பறிமுதல்

5/16/2018 2:51:32 AM

தா.பேட்டை, மே 16: முசிறி அருகே ஏவூர்  கிராமத்தில் காவிரி ஆற்றிலிருந்து திருட்டுத்தனமாக கொண்டு வந்து கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 250 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. முசிறி வட்டாட்சியர் கருணாநிதி, மண்டல துணை வட்டாட்சியர் லோகநாதன், வருவாய் ஆய்வாளர்கள் முத்து, ராஜேஸ்வரி ஆகியோர் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஏவூர் காவிரி ஆற்றில் திருடப்பட்டு கடத்தி செல்வதற்காக 250 சாக்குகளில் மணலை கட்டி பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து மணல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து முசிறி தாலுகா அலுவலகத்தி–்ற்கு  கொண்டு வந்து சேர்த்தனர்.    இதேபோல் சேந்தமாங்குடியில் மணல் கடத்தி சென்ற லோடு வேன் பிடிபட்டது. டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்