SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூட்டிய வீடுகளில் கொள்ளை கைதியிடம் விசாரிக்க ஒருநாள் போலீஸ் காவல் நீதிமன்றம் உத்தரவு

5/16/2018 2:34:18 AM

ஆட்டையாம்பட்டி, மே 16: ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர்கள் விசைத்தறி அதிபர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணிக்கடை அதிபர் சேகர். கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி, இவர்களது பூட்டிய வீடுகளுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், 6 பவுன் தங்கம், ₹12 ஆயிரம் ரொக்கம், இரண்டு ஸ்மார்ட் போன்களை திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ஆட்டையாம்பட்டி வெள்ளையகவுண்டன்காடு பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன்(30), அவனது கூட்டாளி சேலம் தாதகாப்பட்டி வேலு புதுத்தெருவை சேர்ந்த பாபு மகன் ரிஸ்வான்(27) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

 இதில், அம்மாபேட்டையில் 4பவுன் செயின் திருட்டு வழக்கில் மணிகண்டன் கைதாகி, சேலம் மத்திய சிறையில் இருப்பது தெரியவந்தது. ரிஸ்வான் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து மணிகண்டனிடம் விசாரணை மேற்கொள்ள 3 நாட்கள் கஸ்டடி கேட்டு, ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் நடராஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தவுள்ள மணிகண்டன் மீது 2 கொலை வழக்கும், 19 திருட்டு வழக்குகளும் உள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்