SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகாரிகள் ஆய்வில் 2 குழந்தை தொழிலாளர் மீட்பு

5/16/2018 2:34:07 AM

சேலம், மே 16: சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், குழந்தை தொழிலாளர் பணியமர்த்தப்பட்டிருப்பதாக தொழிலாளர் துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து, சேலம் தொழிலாளர் துணை ஆய்வாளர் தாமோதரன், உதவி ஆய்வாளர் ராம், முத்திரை ஆய்வாளர் ராஜசேகர், ஸ்மைல் திட்ட கள அலுவலர்கள் யுவராஜ், மணிமாறன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளர் இந்திரஜித் அடங்கிய குழுவினர், கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, வாகன பழுது பார்க்கும் கடையில் 2 குழந்தைகள்  பணியில் அமர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரையும் அதிகாரிகள் மீட்டு, சேலம் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.

குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய உரிமையாளர் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடைகள், உணவு நிறுவனங்களில்14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் அபாயகரமான தொழில்களில் 18 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் எவரேனும் பணிக்கு அமர்த்தினால், அதன் உரிமையாளருக்கு ₹20 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். எனவே, குழந்தைகளை பணியில் அமர்த்த கூடாது என சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்