SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எய்ம்ஸ் அமைய தோப்பூர் மாநகராட்சியுடன் இணையுமா? புதிய நிபந்தனையால் தொடரும் இழுபறி

5/16/2018 1:42:26 AM

மதுரை, மே 16: எய்ம்ஸ் அமைய தோப்பூர் மதுரை மாநகராட்சியுடன் இணையுமா? எப்போது இணையும்? போன்ற நிபந்தனைகளுடன் கூடிய கேள்விகள் எழுப்பப்படுவதால் இழுபறி தொடருகிறது.  மத்திய அரசின் 2015-16ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது. இதனை எங்கு அமைக்கலாம்? என பரிந்துரைக்கும்படி தமிழக அரசிடம் தெரிவித்தது. மதுரை தோப்பூர், தஞ்சை செங்கிபட்டி, பெருந்துறை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது. இதனை மத்திய அரசின் குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.

 ஆய்வின் முடிவில், “தஞ்சாவூர் செங்கிபட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் இருக்கிறது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உத்தேசித்துள்ள இடத்தின் பூமிக்கடியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் குழாய் குறுக்கிடுகிறது, இதனால் 10 மாடி கட்டிடங்கள் கட்டுவதில் சிக்கல் உருவாகக் கூடும்” என ஒரு காரணம் சுட்டிக்காட்டப்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டு இருந்தது. இதற்கு இந்திய ஆயில் கார்ப்பரேசன் விளக்கம் அளித்து, “எய்ம்ஸ் அமைவதால் ஐ.ஓ.சி. குழாய்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” என தடையில்லா சான்றிதழ் அளித்தது. எய்ம்ஸ்க்கு 100 ஏக்கர் நிலம் போதுமானது. ஆனால் மதுரை தோப்பூரில் 240 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதில் ஐ.ஓ.சி. குழாய் குறுக்கிடும் 40 ஏக்கர் நிலத்தை கழித்தாலும் 200 ஏக்கர் தயார் நிலையில் இருப்பது மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது. இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மற்ற 3 ஊர்களும் நிராகரிக்கப்பட்டன.

 எய்ம்ஸ் அமையப்போவது மதுரையா? தஞ்சையா? என்ற கேள்வி இறுதியாக எழுந்து இழுபறியாக நீடிக்கிறது. இந்த சூழலில் தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் எய்ம்ஸ் இடம் தேர்வு செய்ய உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் இடம் தேர்வுக்காக தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில் பெற்று வருகின்றனர். அதற்கு தமிழக அரசு பதில் அனுப்பி வருகின்றது. தற்போது புதிய நிபந்தனையாக “தோப்பூர் மதுரை மாநகராட்சி எல்லையில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது? இணைய வாய்ப்பு உள்ளதா? இணைந்தால் எப்போது இணையும்? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதனால் இழுபறி நீடிக்கிறது.

இதுகுறித்து உள்ளாட்சித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தோப்பூர் தற்போது மாநகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. மாநகராட்சி எல்கையை திருமங்கலம் வரை இணைக்கும் திட்டம் ஏற்கனவே ஆய்வில் உள்ளது. தோப்பூரில் சேட்லைட் சிட்டி அமைக்கும் திட்டப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே தோப்பூர் மாநகராட்சியுடன் விரைவில் இணைந்து விடும்” என்று ஆய்வு குழுவினருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது” என்றார்.    2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் விரைவில் எய்ம்ஸ் எங்கு அமையும்? என்று மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Netajimodi

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

 • VenezuelaProtestMaduro

  அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

 • ChinaAIRestaurant

  முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

 • GreenLandIceLoss

  கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

 • BuShFiReTaSmAnIa

  ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்