SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோழவந்தான் அருகே புதர் மண்டிய கால்வாய்

5/16/2018 1:42:17 AM

சோழவந்தான், மே 16: சோழவந்தான் அருகே கண்மாய்  மறுகால் நீர் வெளியேறும் கால்வாய் பகுதியில் சீமைக் கருவேல மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால் மழைகாலங்களில் தண்ணீர் கிராமத்திற்குள் புகும் அபாய சூழ்நிலை நிலவுகிறது.
சோழவந்தான் திருவாலவாய நல்லூர் கிராமத்தில்  சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் கண்மாய் உள்ளது. பெரியார் பாசன கால்வாய் மூலமும், கட்டக்குளம் கண்மாய் உபரிநீர் மூலமும் இக்கண்மாயில் நீர் நிரப்பப்பட்டு இப்பகுதியில் சுமார் 250 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இக்கண்மாயிலிருந்து மறுகால் நீர் வெளியேறி கால்வாய் மூலம் அருகில் உள்ள புதுக்குளம் கண்மாய்க்கு சென்று அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

 திருவாலவாய நல்லூர் கண்மாயிலிருந்து புதுக்குளம் கண்மாய்க்கு செல்லும்  கால்வாயில் சீமைக்கருவேல மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினருக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மழை காலத்தில் கால்வாய் வழியே நீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் புகும் அபாய நிலை உள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாலவாய நல்லூரைச் சேர்ந்த பெரியசாமி (39) கூறுகையில், ‘புதுக்குளம் கண்மாய்க்கு செல்லும் கால்வாயின் உள் பகுதியில் சீமைக்கருவேலம் உள்ளிட்ட பல்வேறு  மரங்களும், கோரை புற்களும் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி  காட்சியளிக்கிறது.

இதனால்  தண்ணீர் செல்ல  வழியின்றி மழை காலங்களில் நீர் தேங்கி கால்வாய் ஓரமுள்ள கிராமத்திற்குள் புகும் அபாயநிலை உள்ளது. மேலும் கால்வாயின் உள்பகுதியில் நீர் தேங்கியிருப்பதால்  துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகின்றது. இக்கால்வாய் கரை அருகில் அங்கன்வாடி மையம், அரசு பள்ளி, ரேஷன் கடை, நூலகம் உள்ளிட்டவைகள் உள்ளதால் இங்கு குழந்தைகள் மற்றும்  பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் கால்வாயினுள்ளே ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் தேங்கி மேலும் சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்