SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துரியோதனன் படுகளம் விழா ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பு

5/7/2018 4:48:05 AM

கிருஷ்ணகிரி, மே.7: வரட்டனப்பள்ளியில் நடந்து வரும் பாரத கோயில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், 7 ஊர் மக்கள் கலந்து கொண்டனர். பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி மேல்தெரு ஆலமரம் அருகில் 103 ஆண்டு பழமைவாய்ந்த பாரத கோயிலின் 66ம் ஆண்டு திரவுபதியம்மன் அக்னி வசந்த மகாபாரத விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் கோயில் வளாகத்தில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வந்தது.

மேலும், தினசரி இரவு கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்யு சண்டை, கர்ணன் சண்டை ஆகிய நாடகங்கள் நடைபெற்றது. 17வது நாளான நேற்று காலை கோயில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துரியோதனன், பீமன் சண்டையில் துரியோதனன் இறப்பது போல் நாடக குழுவினர் நடித்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஏழு ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்