SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரிய கோயிலில் சித்திரை திருவிழா சிவகங்கை பூங்கா குளத்தில் தீர்த்தவாரி

4/30/2018 4:09:05 AM

தஞ்சை, ஏப். 30: தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழாவையொட்டி சிவகங்கை பூங்கா குளத்தில் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி  புறப்பாடு நடந்தது. பின்னர் ஓலை சப்பரத்தில் சந்திரசேகர சுவாமி மற்றும் அம்பாள் திருவீதியுலா நடந்தது. 26ம் தேதி தஞ்சை ராஜவீதிகளில் தேரோட்டம் நடந்தது. சித்திரை திருவிழாவின் நிறைவு நாளையொட்டி நேற்று நடராஜர் சுவாமிக, தஞ்சை ராஜவீதிகளில் புறப்பாடு நடந்தது. இதைதொடர்ந்து ஆதி சிவகங்கை குளம் எனப்படும் சிவகங்கை பூங்கா குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபான்ஸ்லே, கோயில் செயல் அலுவலர் மாதவன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம், பாஜ மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதன்பின்னர் கொடியிறக்கப்பட்டு 18 நாட்கள் நடந்த சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. தீர்த்தவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு: தஞ்சை சிவகங்கை பூங்காவையொட்டி கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த ஆலயத்தின் வழியாக தீர்த்தவாரிக்கு சிவகங்கை பூங்கா குளத்துக்கு சுவாமி செல்ல வேண்டும். ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்துவதால் தீர்த்தவாரிக்கு சுவாமிகள் இந்த வழியாக செல்லக்கூடாது என்றனர். தகவல் அறிந்ததும் சிவகங்கை பூங்கா ஆஞ்சநேயர் வழிபாட்டு குழுவினர், பெரிய கோயில் ஓதுவார் கமிட்டி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சிவகங்கை பூங்கா வளாகத்துக்கு வந்தனர். இந்த குளத்துக்கு செல்லும் பாதையை கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயத்தை சேர்ந்தவர்கள் இரும்பு கேட் போட்டு அடைத்துவிட்டனர். இதனால் தஞ்சை நகரில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது புனிதநீர் எடுத்து செல்ல முடியவில்லை. இப்போது தீர்த்தவாரி நடத்த அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். தீர்த்தவாரிக்கு சுவாமியை உள்ளே விடவில்லை என்றால் இந்து அமைப்புகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர். மேற்கு இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்தனர். இதையடுத்து ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டை விரைவில் முடித்து கொள்வதாக கூறி வழிபாட்டை முடித்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aalangatty_kanamalai11

  டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

 • northensnow

  பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • baloon_worstand

  ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

 • redmoon_lunar12

  சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்