SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றுலா உதவி மையம் தொடக்கம்: ரயில்வே ஐஜி திறந்து வைத்தார்

4/25/2018 2:44:50 AM

சென்னை: தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே போலீசாரும், சுற்றுலாத் துறையினரும் இணைந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றுலா உதவி மையத்தை தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தமிழக சுற்றுலாத் துறையும், தமிழக ரயில்வே போலீசாரும் இணைந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கான சுற்றுலா உதவி மையத்தை தொடங்கி உள்ளனர்.

இதன்மூலம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரயில்களில் தமிழகத்திற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் பண்பாட்டு கோயில் குறித்த தகவல்களை தெரியபடுத்தி, சுற்றுலாத் துறையை வளர்ச்சி அடைய செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த சுற்றுலா மையத்தை ரயில்வே போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை கோட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜார்ஜ் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆனிவிஜயா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த உதவி மையத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ஒரு ஊழியரும், ரயில்வே  போலீசார் சார்பில் ஒரு ஊழியரும் எப்போதுமே பணியில் இருப்பார்கள்.  அதுமட்டுமல்லாமல், இந்த மையத்தின் மூலம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு  தேவைப்படும் உதவிகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்