SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்

4/25/2018 2:42:37 AM

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  இந்நிலையில், கடந்த 12ம் தேதி சென்னை அடுத்த திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைக்க வருகை தந்த பிரதமர்  மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர்  கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.முன்னதாக, திருமண மண்டபத்தில் இருந்த சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். தகவலறிந்து நடிகர் மன்சூர் அலிகான்,  கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் ஆகியோர் அங்கு வந்தனர். சீமானை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்ததால்  இருவரும், தங்களது ஆதரவாளர்களுடன் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். போலீசார் தடியடி நடத்தி மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மன்சூர் லிகான், ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18  பேரும் திருத்தணி நீதிமன்றத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.அப்போது, மன்சூர் அலிகான் தரப்பு வக்கீல், ‘மன்சூர் அலிகானுக்கு உடல் நிலை சரியில்லை, அவரால் திருத்தணி நீதிமன்றத்துக்கு செல்ல இயலாது’’  என்றார். இதையடுத்து, ‘செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் காலை 10 மணிக்கு மன்சூர் அலிகான் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’’  என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan_protest123

    பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்...போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்!

  • omen_rain_fall

    ஓமன், ஏமன் நாடுகளை தாக்கிய புயலால், 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

  • ramzan_fasting123

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பின் புகைப்படத்தொகுப்பு!

  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்