SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதியம்பட்டி ஏரியில் விதிமீறி வண்டல் மண் அள்ளிய 3 பொக்லைன் பறிமுதல்

4/22/2018 3:11:11 AM

மேச்சேரி, ஏப்.22: மேச்சேரி  பேரூராட்சிக்கு உட்பட்ட பொதியம்பட்டி ஏரியில், தூர்வாரும் பணிகள் கடந்த 5 நாட்களாக  நடைபெற்று வந்தது. பொதியம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ஏரியில் வண்டல் மண் எடுக்க வருவாய்த்துறை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம் பகுதியில் செங்கல் சூளை வைத்துள்ளவர்கள் இரண்டு குழுவாக பிரிந்து, விவசாயிகள் பெயரில் ஏரியில் வண்டல் மண் அள்ளி செங்கல் சூளைக்கு கடத்தினர். ஏரியில் மண் அள்ளும் பணியில் 3 பொக்லைன்களும், 300க்கும் மேற்பட்ட டிராக்டர்களையும் பயன்படுத்தினர்.

ஏரியில் அரசு நிர்ணயித்த அளவை விட,  பல மடங்கு ஆழத்திற்கு குழி தோண்டி வண்டல் மண் அள்ளிச்சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வண்டல் மண் அள்ளுபவர்களிடம் தட்டிக்கேட்டனர். அவர்களை செங்கல் சூளை உரிமையாளர்கள் மிரட்டினர்.  இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேட்டூர் ஆர்டிஓ (பொ)ராமதுரை முருகனிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக பொதியம்பட்டி ஏரிக்கு சென்று ஆய்வு நடத்திய ஆர்டிஓ ராமதுரை முருகன், அனுமதியின்றி மண் அள்ளிய 3  பொக்லைன்களை  பறிமுதல் செய்ததுடன், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்