SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய தொழில்நுட்பம் அறிமுகம் திருச்சி கோட்ட அஞ்சலகங்கள் 23ம் தேதி வரை இயங்காது

4/22/2018 2:12:31 AM

திருச்சி, ஏப்.22:  திருச்சி கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலகங்களில் புதில் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்த உள்ளதால் 23ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுநிலை அஞ்சல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி அஞ்சல் கோட்டத்தில் வரும் 24ம் தேதி முதல் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் ஏப்ரல் 21ம் தேதி (நேற்று) மதியம் முதல் நாளை (23ம் தேதி) வரை திருச்சி அஞ்சலக கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலங்களில், திருச்சி தலைமை அஞ்சலக இரவு அஞ்சலகம் உட்பட எந்த ஒரு பரிவர்த்தனையும் செய்ய இயலாது. மீண்டும் 24ம் தேதி முதல் புதிய தொழில்நுட்பத்தில் அனைத்து தபால் அலுவலகங்களும் வழக்கம்போல இயங்கும்.  விரைவு தபால், பதிவு தபால் அனுப்ப விரும்புகிறவர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் இயங்கும் திருச்சி ஆர்எம்எஸ் மற்றும் மத்திய பஸ்நிலையம் ரம்யாஸ் ஓட்டல் அருகில் உள்ள ஹெச்ஆர்ஓ அலுவலகத்தை அணுகலாம். மற்ற ஆலோசனைகளுக்கு பிற கோட்ட அஞ்சலகங்களை அணுகும்படி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan_protest123

    பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்...போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்!

  • omen_rain_fall

    ஓமன், ஏமன் நாடுகளை தாக்கிய புயலால், 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

  • ramzan_fasting123

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பின் புகைப்படத்தொகுப்பு!

  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்