SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை திமுக தலைமையில் நாளை அனைத்து கட்சி மனித சங்கிலி திரளாக கலந்து கொள்ள அழைப்பு

4/22/2018 2:12:23 AM

திருச்சி, ஏப்.22: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை (23ம் தேதி) திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கலி அறப்போராட்டம் நடக்கிறது. இதில் திரளாக கலந்து கொள்ள கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உடனே அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்த தன்னுடைய சுயநல அரசியல் காரணங்களால் அமைக்காமல் காலம் தாழ்த்தி மத்திய பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி போராட வேண்டிய மாநில அதிமுக அரசோ, மத்திய அரசின் கைப்பாவையாக மாறி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கி கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் திருச்சியில் நாளை (23ம் தேதி) மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்–்டம் நடக்கிறது. இதில் மனிதநேய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஜிவாஹிருல்லா தலைமை வகிக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகி மகேந்திரன் முன்னிலை வகிக்கிறார்.  இதில் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து அறப்போராட்டம் வெற்றிபெற அழைக்கின்றோம்.  மனித சங்கிலி அறப்போராட்டத்திற்கு நகர, ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்.  திருச்சி மாநகரத்திற்கு- ஜங்சன் பெரியார் நினைவு தூண், திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு-தலைமை தபால் நிலையம், துவாக்குடி நகரம், மேலப்புதூர், அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றியம்-பாலக்கரை, மணப்பாறைநகரம், மணப்பாறை, வையம்பட்டி ஒன்றியம்- காந்தி மார்க்கெட், மருங்காபுரி, புள்ளம்பாடி, லால்குடி ஒன்றியம்-மரக்கடை, மண்ணச்சநல்லூர், முசிறி ஒன்றியம், துறையூர் நகரம்-மெயின்கார்டுகேட், துறையூர் ஒன்றியம்-ஜோசப்கல்லூரி, உப்பிலியபுரம், தாத்தயங்கார்பேட்டை ஒன்றியம்-சத்திரம்பேருந்து நிலையம், ெதாட்டியம் ஒன்றியம்-கலைஞர் அறிவாலயம்.  இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Netajimodi

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

 • VenezuelaProtestMaduro

  அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

 • ChinaAIRestaurant

  முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

 • GreenLandIceLoss

  கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

 • BuShFiReTaSmAnIa

  ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்