SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைமையாசிரியையுடன் மோதல் போக்கு மயங்கி விழுந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி கெங்கவல்லி அருகே பரபரப்பு

4/20/2018 5:44:23 AM

கெங்கவல்லி, ஏப்.20: கெங்கவல்லி அருகே அரசு தொடக்கப்பள்ளியில், தலைமையாசிரியை உடன் ஏற்பட்ட மோதல் போக்கில், மயங்கி விழுந்த உதவி ஆசிரியை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை 13 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மல்லிகா என்பவர் தலைமையாசிரியையாகவும், சந்திரன் மனைவி விஜயா(50) என்பவர் உதவி ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகின்றனர். கடந்த ஓராண்டாகவே, தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியைக்கு இடையே மோதல் போக்கு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. தலைமையாசிரியை விடுப்பு எடுத்தால், பள்ளியின் சாவியை, உதவி ஆசிரியை விஜயாவிடம் கொடுக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், மாணவர்களை தரக்குறைவாக பேசுவது, அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்களில் தலைமை ஆசிரியை ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன், மாணவர்களின் பெற்றோர், தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம் போல பள்ளியில் இருந்த போது, தலைமையாசிரியை மல்லிகாவுக்கும், உதவி ஆசிரியை விஜயாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, திடீரென விஜயா மயங்கி கீழே சரிந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததை கண்டும், இதை கண்டுகொள்ளாமல் தலைமையாசிரியை அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கொடுத்த தகவலின்பேரில், பள்ளிக்கு விரைந்து வந்த விஜயாவின் மகன் ஜெகதீஷ், அவரை உடனடியாக கெங்கவல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால், மாலை வரை அவர் நினைவு திரும்பாமல் மயக்க நிலையிலேயே இருந்ததால், மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் கேட்ட போது, இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தலைமையாசிரியை உடன் ஏற்பட்ட மோதல் போக்கால், மனஅழுத்தத்துக்கு ஆளான உதவி ஆசிரியை மயங்கி விழுந்த சம்பவம் கெங்கவல்லி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HurricaneLesliePortugal

  போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

 • IndiaStatueOfUnity

  இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

 • HBDAbdulKalam87

  ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

 • BuildingCollapseShajahan

  உ.பி.யின் ஷாஜகான்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி

 • engenewedding

  வின்ட்சர் தேவாலயத்தில் இங்கிலாந்து இளவரசி யூஜென் - ஜேக் ப்ரூக்பேங் திருமணம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்