SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புகையில்லா கிராமங்கள் திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு வழங்க 62 இடங்களில் சிறப்பு முகாம்

4/20/2018 5:44:09 AM

சேலம், ஏப்.20:  புகையில்லா கிராமங்கள் திட்டத்தின்படி, இலவச கேஸ் இணைப்பு வழங்க சேலம் மாவட்டத்தின் 62 இடங்களில் சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் புகையில்லா கிராமங்களை உருவாக்கும் பொருட்டு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மூலம் கிராம ஸ்வராஜ் அபியான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மகளிருக்கான கேஸ் இணைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக, இன்று 20ம் தேதி உஜ்வலா தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், நாடு முழுவதும் குறைந்த கேஸ் பயன்பாடு உள்ள கிராமங்களில், சிறப்பு பஞ்சாயத்து நடத்தப்பட்டு, கேஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவச இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து, இத்திட்டத்தின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிரிஷ் சோனவாலே கூறுகையில், “சேலம் மாவட்டத்தில், குறைந்த கேஸ் இணைப்பு உள்ள 62 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி தாலூகாக்களில், மிக குறைந்த எண்ணிகையிலேயே கேஸ் இணைப்புகள் உள்ளன. அனைவருக்கும் கேஸ் இணைப்பு கிடைத்திடவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இன்று 20ம் தேதி 62 இடங்களில் சிறப்பு பஞ்சாயத்து கூடவுள்ளது. அப்போது, பெண்களுக்கான கேஸ் இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில், 47,924 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெறவுள்ள சிறப்பு பஞ்சாயத்தில், குறைந்தது 6,200 இணைப்புகளை வழங்க முடிவு செய்துள்ளோம். எனவே, பெண்கள் ஆதார் அட்டையுடன் வந்து, இலவச இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்,’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்