SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்னப்பட்டி சாலையில் ஆபத்தான நிலையில் புளியமரங்கள்

4/20/2018 5:42:57 AM

இடைப்பாடி, ஏப்.20: கொங்கணாபுரம் அடுத்த சின்னப்பட்டி செல்லும் சாலையில் கரையான் அரித்து அடிப்பகுதி தூர்ந்து போய் ஆபத்தான நிலையில் புளியமரங்கள் உள்ளன. இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் எட்டிகுட்டைமேட்டில் இருந்து, சின்னப்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறமும் அதிகளவில் புளியமரங்கள் உள்ளது. தனியாருக்கு குத்தகைக்கு விட்டு ஆண்டுதோறும் மரத்தில் இருந்து புளி பறிப்பதன் மூலம், நெடுஞ்சாலைத்துறைக்கு வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் 60 ஆண்டுகளுக்கு மேலான இந்த புளியமரங்களில் பல அடிப்பகுதியில் கரையானால் அரிக்கப்பட்டு பாதி அளவுக்கு மரம் தூர்ந்து போய் வலுவிழந்துள்ளது. 5க்கும் மேற்பட்ட மரங்கள் வேர் பகுதி வரை கரையானால் அரிக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சாலையில் ஈரோடு, கொங்கணாபுரம் எட்டிகுட்டைமேடு, சின்னப்ப்டடி, ஓமலூர் ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்கின்றனர்.

சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் போது அவ்வப்போது மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுவது வாடிக்கையாக உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், அடிப்பாகம் முற்றிலுமாக தூர்ந்த மரங்களை அகற்றவும், முறையாக பாராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்