SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருணை கொலை செய்ய அனுமதி சுகவனேஸ்வரர் கோயில் யானைக்கு தொடர் சிகிச்சை

4/20/2018 5:40:58 AM

சேலம், ஏப்.20:   சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில், 40 வயது ராஜேஸ்வரி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டாக, கோரிமேடு மையத்தில் வைத்து பராமரிக்கப்படும் இந்த யானைக்கு, கடந்த மாதம் 5ம் தேதி காலில்  வீக்கம் ஏற்பட்டது. இதனால், யானை நிற்க முடியாமல் படுத்த படுக்கையானது. இதன்பிறகு சேலம், நாமக்கல், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

யானைக்கு படுக்கை புண் போட்டது.  யானை படும் துன்பத்தை பார்த்து, விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர், அதனை கருணை கொலை செய்ய உத்தரவிடும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், யானையை கருணை கொலை செய்யலாம் என கடந்த 16ம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவில் 48 மணிநேரத்தில் யானையில் உடல்நிலை குறித்து கால்நடை மருத்துவர்கள் அறிக்கை தயார் செய்து அனுப்ப வேண்டும். அரசு விதிமுறைகளை பின்பற்றி, யானையை கருணை கொலை செய்யலாம் என்று கூறியிருந்தது. நீதிமன்ற விதித்த கெடுவான 48 மணி நேரம், நேற்று முன்தினம் 12 மணியோடு முடிந்துவிட்டது. நேற்று முன்தினம் காலை சென்னை, நாமக்கல் மருத்துவக்குழுவினர் யானையை பரிசோதனை செய்தனர். அப்போது பணியில் இருந்த கால்நடை டாக்டர்களிடம் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உடல்நிலை நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். இந்த அறிக்கையை சென்னை, நாமக்கல், சேலம் கால்நடை மருத்துவர்கள் சேர்ந்து, அறிக்கையை தயாரித்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் அவர்கள் என்ன முடிவு எடுத்துள்ளனர் என்பது குறித்து, இதுவரை தெரியப்படுத்தவில்லை. இதனிடையே, நேற்று காலை வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் யானையை பரிசோதனை செய்தார். தொடர்ந்து சேலம் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள், யானைக்கு இளநீர் கொண்டு வந்து கொடுத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-08-2018

    17-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்