SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் பொதுமக்கள் அதிர்ச்சி.

4/20/2018 5:40:52 AM

கெங்கவல்லி, ஏப்.20: கெங்கவல்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருந்து பெட்டகத்தில் காலாவதியான மருந்துகள்
இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பிரசவ பிரிவிலும் காலாவதியான மருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. இங்கு 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் காலாவதி தேதி முடிந்த மருந்துகள் இருப்பது அம்பலமானது. ஏழை, எளிய மக்களின் நம்பிக்கையாக திகழும் அரசு மருத்துவமனையில், காலாவதி மருந்துகள் கொடுக்கப்பட்டால், நோயாளிகளின் உயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும் என்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபோன்ற அவலங்கள் அரங்கேறாமல் தடுக்க, டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்