SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடையம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் மக்கள் பாதிப்பு

4/17/2018 5:43:34 AM

கடையம், ஏப்.17: கடையம் அருகே ரவணசமுத்திரம் குடியிருப்பு பகுதியில் முதலியார்பட்டி ஊராட்சியினர் குப்பைகள் கொட்டி தீ வைப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கபட்டு வருகின்றனர். கடையம் யூனியன் உட்பட்டது முதலியார்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள கழிவு குப்பைகள், அசுத்தமான கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை ரவணசமுத்திரம் செல்லும் வழியில் கொட்டப்பட்டு வருகின்றன. இங்கு திருமலையப்பபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான ஜல்வத் நகர், ரவணசமுத்திரம் ஊராட்சி பகுதியான புதுமனை தெரு, அம்பாநாயகம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். தற்போது கடந்த சில மாதங்களாக முதலியார்பட்டி குப்பைகளை இங்கு  கொட்டப்பட்டு வருவதால் இதில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களிடையே தொற்று நோயை பரப்பி வருகிறது.

 மேலும் விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகை பரவி மூச்சு திணறல், ஆஸ்மா உள்ளிட்ட சுவாச கோளாறு நோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் இங்கு குப்பைகள் கொட்டபட்டு தீ வைத்து வருவதால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதுபற்றி கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம் என்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் குடியிருப்புக்கு மத்தியில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தி மக்கள் சுகாதாரமான வாழ்விற்கு வழி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்