SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய திறனாய்வு தேர்வு மூலைகரைப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் 8 பேர் தேர்ச்சி

4/17/2018 5:43:03 AM

நெல்லை, ஏப். 17: மூலைக்கரைப்பட்டி அரசுப்பள்ளி மாணவிகள் 8 பேர் முதல் முறையாக தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நடப்பு கல்வியாண்டிற்கான தேசிய திறனாய்வு போட்டி 8ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இதில் நெல்லை மாவட்டம் தேசிய திறனாய்வு தேர்வில் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் அனுசியா, அபிராமி, சுமித்ரா மெர்சி, நதியா, முத்துகலா, வேம்பு அரசி, சங்கீதா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களது தேர்ச்சிக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களை கல்வி மன்ற குழு தலைவர் குமார், பள்ளி தலைமையாசிரியர் ரெஜினி பத்மாவதி, உதவி தலைமையாசிரியர் ஜோதிவேல் ஆகியோர் பாராட்டினர். தேர்ச்சி பெற்ற மாணவிகள் 12ம் வகுப்புவரை ஊக்க தொகையாக மாதம்  ரூ-500 பெறுவர். மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரே ஆண்டில் 8 மாணவிகள் தேர்ச்சி பெறுவது இதுவே முதல் முறை என பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்