SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி

4/16/2018 5:35:03 AM

திருச்சி, ஏப்.16:  காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி அருள்நிதி தலைமை ரசிகர் மன்றத்தினர் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடிகர் அருள்நிதி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  திருச்சி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சதீஷ், குணசேகர், வாசுதேவ், கண்ணன், விக்கி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவரும் கருப்பு சட்டை அணிந்து கொண்டு, பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மறியலில் ஈடுபட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும். எனவே மறியலை கைவிடும்படி கேட்டுக் கொண்டதின் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்