SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புலிவலம் ஓம்சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

4/16/2018 5:34:55 AM

துறையூர், ஏப்.16: திருச்சி மாவட்டம் புலிவலம் கிராமத்தில் உள்ள ஓம்சக்தி மாரியம்மன் கோயில் 35ம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
புலிவலம் கிராமத்தில் உள்ள ஓம்சக்தி மாரியம்மன் கோயில் 35ம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி 108 விளக்கு பூஜை நடைபெற்றது. அதனையடுத்து உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் 108 கோபூஜை நடைபெற்றது. கடந்த 1ம் தேதி அதிகாலை புலிவலம் ஓம்சக்தி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பக்தகள் அம்மனை அலங்கரித்து வாகனத்தில் எடுத்துகொண்டு சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக சென்றனர்.

விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் சக்தி கரகம், அலகு காவடிகள், தீர்த்தகுடம், பால்குடம், தயிர்குடம், பஞ்சாமிர்த குடம், இளநீர் காவடி, தீச்சட்டி எடுத்து  ஊர்வலமாக வந்து இரவு 10 மணிக்கு அம்மன் ஆலயத்திற்கு முன்பு பக்தர்கள் தீ மிதித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று  நடைபெற்றது. புலிவலத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து பானகம், அன்னதானம் வழங்கினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்