SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமயபுரம் கோயிலில் நாளை தேரோட்டம் திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

4/16/2018 5:34:10 AM

திருச்சி, ஏப்.16: சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா நாளை நடைபெறுவதையொட்டி திருச்சியில் இன்று மதியம் முதல் 2 நாள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரசித்திப்பெற்ற சக்தி ஸ்தலங்களில் ஒன்றான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட விழா நாளை (17ம் தேதி) நடைபெறுகிறது. இதில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே திருச்சியில் இன்றும் (16ம் தேதி) மற்றும் நாளை (17ம் தேதி) ஆகிய இரண்டு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் குடமுருட்டி, ஜீயபுரம், பெட்டவாய்த்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக செல்ல வேண்டும். அதேபோல் ேசலம், நாமக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் முசிறி கைகாட்டி, குளித்தலை, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம் வழியாக திருச்சிக்கு வர வேண்டும்.

திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள், மணப்பாறை ஆண்டவர் கோயில் செக்போஸ்டில் திரும்பி குளித்தலை, முசிறி, பெரியார் பாலம், துறையூர் வழியாக பெரம்பலூர் பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும். அதேபோல், மதுரையில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் லஞ்சமேடு கைகாட்டியில் திரும்பி மணப்பாறை, ஆண்டவர்கோயில் செக்போஸ்ட், குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர் வழியாக பெரம்பலூர் பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும்.அதேபோல் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் கொள்ளிடம் ஒய் ரோடு சந்திப்பில் திரும்பி கொள்ளிடம் ரவுண்டானா, நொச்சியம், மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், எதுமலை ஜங்ஷன், திருப்பட்டூர் கட்ரோடு, சிறுகனூர் வழியாக சென்னை டிரங்க் ரோட்டில் செல்ல வேண்டும்.

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வரும் கனரக வாகனங்கள், பெரம்பலூர், அரியலூர், புள்ளம்பாடி, லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் பாலம் வழியாக திருப்பி விடப்படுகின்றன. இன்று (16ம் தேதி) பகல் 12 மணி முதல் நாளை (17ம் தேதி) பிற்பகல் 3 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என மாவட்ட எஸ்பி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

  • governor_palace11

    பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்