SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மழையால் மரம் விழுந்து வீடுகள் சேதம்

4/16/2018 5:12:15 AM

பொள்ளாச்சி,ஏப்.16:  பொள்ளாச்சியில், மழையால் மரம் விழுந்து சேதமான வீடுகளை நேற்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பார்வையிட்டார்.
 பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் கன மழை பெய்தது. இந்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல், மார்க்கெட்ரோடு செரிப்காலனியில் இருந்த பழமையான மரம் ஒன்று திடீர் என அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது விழுந்தது.  இதில், அசைன்பாட்ஷா(47), சிராஜ்நிஷா(60)ஆகியோரின் வீடு பெரும்பகுதி சேதமானது.
வீட்டில் இருந்தவர்கள், மரம் விழுந்ததையறிந்து உடன் வெளியேறினர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், அடுத்தடுத்து மூன்று மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததில், அருகே இருந்த மூன்று வீடுகளும் சேதமானது. இதையடுத்து, பொதுமக்கள் சாலைமறியல் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று, செரிப்காலனியில் மழைக்கு சேதமான வீடுகளை, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பார்வையிட்டார். மேலும், சர்க்கரை மற்றும் அரிசி, வேட்டி சேலை உள்ளிட்ட நிவாரண உதவியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தாசில்தார் செல்வபாண்டி, முன்னாள் நகர்மன்ற தலைவர் கிருஷ்ணகுமார், டிஎஸ்பி.,கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜேம்ஸ்ராஜா, மணிபாரதி மற்றும் வடுகை கனகு, அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்