SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படியுங்கள் வரத்து குறைவு தேவை அதிகரிப்பு இஞ்சி விலை கிடுகிடு

4/16/2018 2:05:20 AM

மதுரை, ஏப். 16: மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட்டில் வரத்து குறைந்து வரும் நிலையில், தேவை அதிகரித்துள்ளதால், இஞ்சி விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனையானது.   மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இஞ்சி மார்க்கெட்டிற்கு வரத்து வருகிறது. கறிமசாலாவுக்கும், ஊறுகாய் தயாரிப்புக்கும் இஞ்சி அதிகளவில் தேவைப்படுகிறது. இதேபோல், சித்தா, யுனானி மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இங்குள்ள பகுதிகளில் இஞ்சி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்க்கெட்டிற்கு வரும் வரத்து குறைந்துள்ளதால், விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் கிலோ ரூ.25முதல் ரூ.30க்கு விற்பனையான இஞ்சி ரூ.50க்கு விற்பனையாகிறது.

 இதுகுறித்து சென்ட்ரல் காய்கறிகள் மார்க்கெட் சங்க தலைவர் முருகன் கூறும்போது, ‘ஏற்கனவே, இஞ்சி சாகுபடி பரப்பளவை விவசாயிகள் குறைத்துள்ளனர். இந்தநிலையில், இஞ்சி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது தான் விலை ஏற்றத்திற்கு முக்கியக்காரணம். குறிப்பாக, வரும் காலங்களில் கோடை மழை பெய்தால், சாகுபடி மேலும் பாதிக்கப்பட்டு, விலை மேலும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது’ என்றார்.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்