SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைகொடுக்குது கோடைமழை சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் திறக்க முடிவு விவசாயிகள் ஆனந்தம்; குடிநீருக்கும் சிக்கல் வராது

4/16/2018 2:04:57 AM

மதுரை, ஏப். 16: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கோடை மழை, குடிநீருக்கு கைகொடுக்கிறது. சித்திரை திருவிழாவுக்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க முடிவு செய்து, பெரியாறு அணையில் இருந்து முன்கூட்டியே வைகைக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது.மதுரை மாநகர் மற்றும் மாவட்ட கூட்டு குடிநீருக்கு வைகை அணையில் இருந்து தினமும் திறக்கப்படும் நீரின் அளவு 60 கன அடியில் இருந்து 48 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த முறை கடந்த 9ம் தேதி அமல் செய்யப்பட்டபோது, பெரியாறு அணையில் 112.40 அடி, வைகை அணையில் 32.87 அடி மட்டுமே இருந்தது.

வைகை ஆறு வறண்டதால், ஆற்றிலுள்ள மேலக்கால், மணலூர் பகுதியில் இருந்து கிடைத்த நீரின் அளவும், காவிரி ஆற்றில் இருந்து கிடைக்கும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அளவும் கணிசமாக குறைந்தது. மதுரை நகருக்கு மட்டும் ஒரு நாள் குடிநீர் தேவை 300 மில்லியன் லிட்டர். அதில் பாதி அளவுக்கே தற்போது சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போதுள்ள குடிநீர் தட்டுப்பாடு மே மாதம் அதிகரிக்கும் என்று கருதப்பட்டது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து குடிநீருக்கு கை கொடுக்கிறது. குறிப்பாக அணையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை ஆறுதலை அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பெரியாறு அணைக்கு 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஆயிரத்து 721 கனஅடி நீர் வந்தது. இதனால் நீர்மட்டம் நேற்று 114.20 அடியாக உயர்ந்தது. இதனால் வைகை அணை நோக்கி திறக்கும் தண்ணீர் அளவு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் நேற்று 33.46 அடியானது. பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை இன்று நீர்வரத்து அதிகரிக்கும்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கோடை மழை பெய்வதால், குடிநீருக்கு மே இறுதி வரை சமாளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அணைகளில் சிறிது நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கோடை மழை நீடிக்கும் என வானிலை தகவல் வெளியாகி உள்ளது. எனவே, மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் உற்சவத்தின்போது வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பெரியாறு அணையில் இருந்து வைகைக்கு திறக்கும் நீரின் அளவு 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை ஆற்றிலுள்ள குடிநீர் ஆதார கிணறுகளிலும் கூடுதல் நீர் கிடைக்ககூடும். எனவே, கோடையில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியும்,’’ என்றார்.

அணைகளின் மட்டம் nபெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் தமிழகப்பகுதிக்கு வைகையை நோக்கி திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. ல் வைகையில் இருந்து மதுரை குடிநீருக்காக வினாடிக்கு 48 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 525 மில்லியன் கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 107.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 44 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 70.83 மில்லியன் கனஅடியாக உள்ளது.மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 31.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. அணையின் இருப்புநீர் 94.44 மில்லியன் கனஅடியாக உள்ளது. பெரியாறு 22 மி.மீ, தேக்கடி 10 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

எதனால் இந்த முடிவு?
சித்திரை திருவிழாவின்போது அணையில் இருந்து 3 நாட்கள் மொத்தம் 150 மில்லியன் கனஅடி நீர் திறப்பது வழக்கம். கடந்த 2017ம் ஆண்டு திருவிழாவுக்கு ஆற்றில் திறக்க தண்ணீர் இல்லை. 2016ம் ஆண்டு திருவிழாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது பெரியாறு அணையில் 110.60 அடி, வைகையில் 33.66 அடி தான் இருந்தது. எனவே, தற்போது அதை விட அணையில் தண்ணீர் கூடுதலாக இருப்பதால் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்