SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் திரண்டனர்

4/16/2018 1:08:04 AM

சேலம், ஏப்.15: தமிழ் புத்தாண்டையொட்டி, சேலம் மாவட்ட கோயில்களில் விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தமிழ் புத்தாண்டு, மாநிலம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதிகாலை முதலே கோயில்களில் திரண்ட பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் டவுன் தேர்வீதியில் அமைந்துள்ள ராஜகணபதி கோயிலில் விசேஷ வழிபாடு நடந்துது. காலை 5 மணிக்கு 16 வகையான பல்வேறு மூலிகைகளால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், ராஜகணப திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரணை நடந்தது. ெதாடர்ந்து, காலையில் வெள்ளிக்கவசமும், மாலையில் தங்கக்கவசமும் சாத்தப்பட்டது.  
சேலம் டவுன் ஐயப்பன் பஜனை மண்டலி தர்மசாஸ்தா ஆஸ்ரமத்தில், காய்கறி மற்றும் பழங்களால் விஷூ கனி அலங்காரம் ெசய்யப்பட்டிருந்தது. வின்சென்ட் எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், தங்க கவசம் சாத்தப்பட்டது. சேலம் சுகனேஸ்வரர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், கோட்ைட அழகிரிநாத பெருமாள் கோயில், அம்மாப்பேட்டை செங்குந்தர் சுப்ரமணியர் திருக்கோயில், குமரகிாி தண்டாயுதபாணி சுவாமி கோயில், டவுன் காசி விஸ்வநாதர் கோயில், சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில் ஆகியவற்றில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
 வீராணம் மூக்கரகாளியம்மன் கோயிலில், அதிகாலை முதலே அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் திருவீதி உலா நடந்தது. இதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்