SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எலக்ட்ரீசியன் கொலை வழக்கு செல்போனில் பேசியவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

4/16/2018 1:07:53 AM

சேலம், ஏப்.15: சேலம் அருகே எலக்ட்ரிசியன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரிடம் செல்போனில் பேசிய சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்தவர் வீரக்குமார்(41). அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயில் அருகே, பேளூர் ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு, வீரக்குமார் கடைக்குள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய காரிப்பட்டி போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இக்கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் கமலேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட வீரக்குமார், 3 திருமணம் செய்தும் மனைவிகளை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால், அவருக்கு மேலும் சில பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்களின் உறவினர்கள் தரப்பில் இருந்து இக்கொலையை அறங்கேற்றியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதுதொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
 இதனிடையே வீரக்குமாரின் செல்போனுக்கு கொலையுண்ட நாளில் பேசியநபர்களின் பட்டியலை எடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதன்பேரில், சந்தேக நபர்கள் 5 பேரை பிடித்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வீரக்குமார் கொலை, கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த கோணத்தில் சிலரை பிடித்து வந்து விசாரிக்கிறோம். ஓரிரு நாளில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள்,’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்