SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலையாளப்பட்டி-ஜம்பூத்துமலை இடையே 4 கி.மீ.,க்கு தார்சாலை

4/16/2018 1:07:44 AM

சேலம், ஏப்.15:சேலம் தேக்கல்பட்டி ஊராட்சி மலையாளப்பட்டி முதல் ஜம்பூத்துமலை வரை 4 கிலோ மீட்டருக்கு ₹3.85 கோடியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. வாழப்பாடி அருகே, தேக்கல்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் மூலம் மலையாளப்பட்டி முதல் ஜம்பூத்துமலை வரை செல்லும் 4 கி.மீ., நீள மண்சாலையை தார்ச்சாலையாக மேம்படுத்தும் பணி தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ரோகிணி கலந்துகொண்டு, ₹3.85 கோடியில் மலைப்பாதையில் தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். தேக்கல்பட்டி ஊராட்சியில் ஜம்பூத்துமலை, சின்ன ஜம்பூத்துமலை, சாரபுலிக்காடு உள்ளிட்ட 14 குக்கிராமங்கள் உள்ளன. இதில், மலையாளப்பட்டியில் இருந்து ஜம்பூத்துமலைக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் முதியவர்களின் மருத்துவம், மாணவர்களின் கல்வி, விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லுதல், கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல் போன்றவற்றுக்கு மிகுந்த சிரமத்தை மலைகிராம மக்கள் சந்தித்து வந்தனர். தற்போது, இந்த இரு கிராமத்திற்கு இடையே புதிதாக தார்சாலை அமைவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி எம்பி காமராஜ், ஏற்காடு எம்எல்ஏ சித்ரா, சேலம் சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் மகேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன், நாமக்கல் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்