SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மீட்பு

4/16/2018 12:44:33 AM

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று காலை ஒரு சிறுவன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். இதைப்பார்த்த ரயில்வே ஊழியர் ஒருவர் உடனே இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சென்ட்ரல் ரயில் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரளா விரைந்து வந்து அந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது, அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல பதில் அளித்தான்.

உடனே, சப்-இன்ஸ்பெக்டர் சரளா அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, அந்த சிறுவன் ஒரு செல்போன் எண்ணை கூறினான். அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது, அந்த சிறுவன் அரியலூர் மாவட்டம் கீழராமனநல்லூர் பகுதியை சேர்ந்த கீர்த்திவாசன் (16) என்பதும், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் ரயில் ஏறி சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும், அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர் கண்டு கொள்வது கிடையாது என கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனை அவரது தாத்தா வளர்த்து வருகிறார் என தெரிந்தது. அதைத்தொடர்ந்து, அந்த சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சிறுவனின் தாத்தா நேற்று மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர், சிறுவனை பார்த்த அவரது தாத்தா, அவனை கட்டிபிடித்து அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. தொடர்ந்து, சிறுவனை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு சிறுவனின் தாத்தா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்