SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடற்கரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த மின்சார ரயிலில் இளம்பெண் சடலம்

4/16/2018 12:44:10 AM

 சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மின்சார ரயில் பெட்டிக்குள் இளம்பெண் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு நேற்று முன்தினம் இரவு இயக்கப்பட்ட கடைசி மின்சார ரயில், இரவு கடற்கரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, நேற்று காலை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தத

பயணிகள் வழக்கம் போல், ரயிலில் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது, அந்த மின்சார ரயிலில் உள்ள ஒரு பெட்டியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து உடனே ரயில் டிரைவருக்கு தகவல் கொடுத்தனர்.ரயில் டிரைவர் உடனே ரயில்வே காவல் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் எழும்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஜா வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண் யார்? மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டாரா? ரயிலுக்குள் இளம்பெண் பிணமாக கிடந்தது எப்படி? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். இருப்பினும், இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மையான நிலவரம் தெரியவரும் என கூறப்படுகிறது. அதேபோல், தென் மாவட்டங்களில் இருந்து நேற்று காலை சென்னையை நோக்கி வந்த ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்தும் எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்