SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரைப்பாடி-கல்பட்டிசத்திரம் இடையே இருவழிப்பாதை இன்ஜினியரிங் பணி ரயில் சேவையில் மாற்றம்

3/14/2018 2:23:50 AM

திருச்சி, மார்ச் 14:  மதுரை கோட்டத்திற்குட்பட்ட தாமரைப்பாடி-கல்பட்டிசத்திரம் இடையே இருவழிப்பாதை பணிக்காக இன்ஜினியரிங் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வண்டி எண்.56821/56822 மயிலாடுதுறை-திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் திண்டுக்கல்-திருச்சி-திண்டுக்கல் இடையே இன்று(14ம் தேதி), வரும் 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
 வண்டி எண். 56822 மயிலாடுதுறை-திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் நாளை (15ம் தேதி) திண்டுக்கல் ரயில்நிலையத்தில் 11.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.05 மணிக்கு புறப்படும். இதன் காரணமாக திருச்சி ரயில்நிலையத்திற்கு 1 மணி நேரம் 40 நிமிடம் தாமதமாக வந்து சேரும்.

 வண்டி எண். 56822 மயிலாடுதுறை-திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் நாளை மறுநாள் 16ம் தேதி திண்டுக்கல் ரயில்நிலையத்தில் 11.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12.25 மணிக்க புறப்படும். இதன் காரணமாக திருச்சி ரயில் நிலையத்திற்கு 1 மணி நேரம் தாமதமாக வந்து சேரும். வண்டி எண். 56822 மயிலாடுதுறை-திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் வரும் வரும் 25தேதியில் இருந்து 27ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 11.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1 மணிக்கு புறப்படும். இதன் காரணமாக திருச்சி ரயில் நிலையத்திற்கு 95 நிமிடம் தாமதமாக வந்து சேரும்.  வண்டி எண்.(16352) நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று வழி தடத்தில் இயக்கப்படுவதால் வரும் நாளை திருச்சி ரயில்நிலையத்திற்கு 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக வந்து சேரும்.

 வண்டி எண்.16128 குருவாயூர்/தூத்துக்குடி- சென்னை எழும்பூர் இணைப்பு ரயில் நாளை(15ம் தேதி) கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படுவதால் திருச்சி ரயில்நிலையத்திற்கு 25 நிமிடம் தாமதமாக வந்து சேரும்.  வண்டி எண்.16128 குருவாயூர்/தூத்துக்குடி -சென்னை எக்மோர் இணைப்பு ரயில் வரும் 24ம் தேதி கட்டுப்படுத்தப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக திருச்சி ரயில்நிலையத்திற்கு வந்து சேரும். வண்டி எண்.16532 நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வரும் 15ம் தேதி 1.15 மணி நேரம் தாமதமாக தாமதமாக திருச்சி ரயில்நிலையத்திற்கு வந்து சேரும். இதே போல வண்டி எண்.16128 குருவாயூர்/தூத்துக்குடி-சென்னை எழும்பூர் இணைப்பு ரயில் கட்டுப்படுத்தப்பட்டு 1.15 மணி நேரம் தாமதமாக வந்து சேரும் என அதில் கூறப்பட்டுள்ளது. தஞ்சை-சோளகம்பட்டி

இதே போல தஞ்சை-சோளகம்பட்டி இடையே இன்ஜினியரிங் பணி நடைபெற உள்ளதால் வண்டி எண்.56822 திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் நேற்று (13ம் தேதி) முதல் 27ம் தேதி வரை  திருநெல்வேலியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருச்சி-மயிலாடுதுறை இடையே மேற்கண்ட தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.  வண்டி எண். 56821 மயிலாடுதுறை-திருநெல்வேலி பயணிகள் ரயில் மயிலாடுதுறையில் இருந்து 11.25 மணிக்கு புறப்படுவது வழக்கம். இந்த ரயில் வரும் நேற்று முதல் (13ம் தேதி) 27ம் தேதி வரை மயிலாடுதுறை-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்