SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்ஸ்பெக்டர் தாக்கியதில் இளம்பெண் உஷா பலி கைதான 27 பேர் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது துணை கமிஷனரிடம் வலியுறுத்தல்

3/14/2018 2:23:19 AM

திருச்சி, மார்ச் 14: திருச்சி துவாக்குடி அருகே கடந்த 7ம் தேதி போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது ெஹல்மெட் போடாமல் சென்றதால், இன்ஸ்பெக்டர் காமராஜ் டூவீலரை எட்டி உதைத்ததில் பைக்கில் இருந்து கீழே விழுந்த உஷா என்ற பெண் பலியானார். இதைக்கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவு சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நடத்தப்பட்ட தடியடியில் ஏராளமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அரசு பஸ்களை அடித்து உடைத்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம தொடர்பாக  வக்கீல் சங்கர் உள்பட 3 பேர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இந்த வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறையில் உள்ளவர்களுக்கு ஜாமீன் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சி மற்றும் வக்கீல் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை இன்று நடக்கிறது. முன்னதாக நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது போலீசார் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படாது என கடந்த 8ம் தேதி போராட்டத்தின் போது போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற கோரி நேற்று மாநகர துணை கமிஷனர் சக்திகணேசனை சந்தித்து மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஜீவா, புதிய தமிழகம் மா.செயலாளர் சங்கர் மற்றும் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி உள்பட நிர்வாகிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் இந்த வழக்கில் மாநகர போலீஸ் தடையிட முடியாது. எனவே திருச்சி மாவட்ட எஸ்பியை சந்தித்து கோரிக்கை விட கூறியதை அடுத்து நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஜீவா கூறுகையில், இதுமுற்றிலும் ஏமாற்றும் செயலாகும். அதுபோல் இச்சம்பவத்தை கண்டித்து வரும் 15ம் தேதி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த மனு அளித்தும் அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சியாக உஷா கர்ப்பம் இல்லை என கூறப்படுகிறது. இந்த செயல்கள் முற்றிலும் தவறானது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kashmirfiring

  ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை

 • CongoViolenceHunger

  பேரழிவின் பிடியில் காங்கோ: பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் 2 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!

 • Melmaruvathurlake

  மேல்மருவத்தூர் ஏரியில் குவிந்துள்ள பறவைகளின் ரம்மியமான காட்சி

 • 23-03-2018

  23-03-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tiruvannamalaielephant

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் யானை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்