SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை பஞ்.அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

3/14/2018 2:20:52 AM

ஜலகண்டாபுரம், மார்ச் 14: ஜலகண்டாபுரம் அருகே, 3 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
 ஜலகண்டாபுரத்தை அடுத்த தோரமங்கலம் கிராமம், அருணாச்சல நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மேல்நிலை தீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டிக்கு தோரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அமைந்துள்ள நீரேற்று நிலையத்தில் மூலம், காவிரி நீர் பம்ப் செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் பிரதான பைப் லைனில், சிலர் அனுமதியின்றி குடிநீர் இணைப்பை ஏற்படுத்தியும், மின் மோட்டார் பொருத்தியும் குடிநீரை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர்.

 இதனால் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகளும் வறண்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், தோரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, கிராம செயலாளரிடம் புகார் கூறினர். ஆனால் அவர் அதற்கு முறையான பதிலளிக்கவில்லை. இன்னும் ஒருசில நாட்களில், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஊர்மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கூறி கலைந்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்