SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சேலத்தில் 27ம் தேதி நடக்கிறது தபால் துறை குறைதீர் கூட்டம்

3/14/2018 2:20:37 AM

சேலம், மார்ச் 14: சேலம் தலைமை தபால் நிலையத்தில் வரும் 27ம் தேதி தபால்துறை குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் கிழக்கு தபால் கோட்டத்தின் தலைமை தபால் நிலையத்தில், வரும் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு, தபால் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆறுமுகம், குறைகளை ேகட்டறிகிறார். மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், அஞ்சல் ஆயுள் காப்பீடு, பார்சல் தபால் தொடர்பாக உள்ள குறைகளை மக்கள் நேரில் தெரிவிக்கலாம். நேரில் வர முடியாதவர்கள் தபாலில் குறைகளை தெரிவிக்க, ‘முதுநிலை கண்காணிப்பாளர், கிழக்கு தபால் கோட்டம், சேலம்-636001,’ என்ற முகவரிக்கு வரும் 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க ேவண்டும்.

தபாலில் அனுப்பப்படும் புகாரில், பிரச்னையை மிக தெளிவாக தெரிவிக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு தொடர்பாக இருந்தால், கணக்கு எண், பாலிசி எண், வசூலிக்கப்பட்ட விவரம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும். இத்தகவலை முதுநிலை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்