SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகை, பணத்துக்காக 3 பெண்களை ஏமாற்றி திருமணம் கல்யாண மன்னன் கைது; பரபரப்பு தகவல்கள்: வங்கியில் கடன் பெற்றுத்தருவதாக 50 லட்சம் மோசடி

3/14/2018 2:13:52 AM

சென்னை: நகை, பணத்துக்காக 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர். மேலும் வங்கியில் கடன்  வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.புழல் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆடலரசு (27). சூரப்பட்டு அடுத்த மாதனாங்குப்பத்தில் உள்ள தனியார்  பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஆறு மாதத்துக்கு முன்புதான் தனியார் நிதி நிறுவனம் மூலம் புதிதாக வாடகைக்கு கார்  ஓட்டுவதற்காக கார் வாங்கினார். விடுமுறை நாட்களில் சவாரி கிடைக்காததால் அந்த காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். சென்னை ராயப்பேட்டை, அம்மையப்பன் தெருவை சேர்ந்த நிர்மல் மகேஷ் (44), அவரது மனைவி அனிதா (24) ஆகியோர் ஆடலரசை தொடர்பு  கொண்டனர். அவர்கள் தங்களுக்கு செங்குன்றம் அடுத்த பொத்தூரில் வீடு இருப்பதாக போலி ஆவணத்தை காட்டி உள்ளனர். ஆடலரசு தனியார் நிதி  நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய மாதத்தவணை 20 ஆயிரத்தை தாங்களே கட்டி விடுவதாகவும், நிர்மல் ஒப்புக்கொண்டு காரை எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து ஆடலரசுக்கு  ஒருபோன் வந்தது. அதில் இரண்டு மாதமாக மாதத்தவணை செலுத்தவில்லை.   உடனே வந்து கட்டும்படி கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆடலரசு, நிர்மலின் செல்போனை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப்  செய்யப்பட்டிருந்தது. அவர் தந்த முகவரியும் போலி என்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆடலரசு, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், வழக்குப்பதிவு செய்து  நிர்மலிடம் தொலைபேசியில் பேசியபோது, தான் ஒரு ஐகோர்ட் வக்கீலாக இருப்பதாகவும், அமைச்சரின் பி.ஏ.வாக இருப்பதாகவும் தன்னால் வரமுடியாது  என்றும் போனில் மிரட்டியுள்ளான். இந்நிலையில், மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வன், புழல் உதவி கமிஷனர் கிருபாகரன் ஆகியோருக்கு நிர்மல் போன் செய்து,  தான் ஒரு உச்ச  நீதிமன்ற நீதிபதி, உங்களுடைய எஸ்.ஐ. சதீஷ்குமார் என்னை காவல் நிலையத்துக்கு வரும்படி மிரட்டுகிறார். நான் யார் தெரியுமா என்று பேசியுள்ளார்.  இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள் நிர்மலை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை  அமைத்தனர். அவர்கள் நிர்மலின் செல்போனை வைத்து விசாரணை தொடங்கினர். அதில் பாண்டிச்சேரி லெனின் தெருவில் உள்ள ஒரு வீட்டில்  இருப்பதை கண்டுபிடித்து அவனையும் அவனது மனைவி அனிதாவையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில், நிர்மல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மதுராந்தகத்தை சேர்ந்த சிவகாமி என்ற பெண்ணை நிர்மல் முதல்  திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மனைவியிடம் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். பின்னர்  செங்குன்றம் அடுத்த பாலவாயல் என்ற கிராமத்தில் கஸ்தூரி என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளான். அந்த பெண்ணிடம் இருந்த நகைகளை  எடுத்துக் கொண்டு  அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதிக்கு வந்தான். அங்கு நிர்மலுக்கு சரளா என்ற பெண்ணிடம் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த  கள்ளத் தொடர்பால் சரளாவின் மகள் அனிதாவை 2013ம் ஆண்டு மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு அவளுடன் வாழ்க்கை நடத்திவந்தது  தெரியவந்துள்ளது. மேலும் வங்கியில் நிலத்தின்பேரில் லோன் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் சுமார் ₹50 லட்சத்துக்கும் மோசடி செய்ததாக  கூறப்படுகிறது. போலீசார் கணவன் -மனைவி இருவரையும் கைது செய்து  பொன்னேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-06-2018

  21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga_dayceleb1

  சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

 • rosesaucesChina

  சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

 • KimJongJinpingMeets

  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

 • MtEverestGarbage

  மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்