SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒதுக்கப்படாத வழித்தடத்தில் மினிபஸ்களை இயக்குவதால் ஆட்டோ தொழில் பாதிப்பு

3/13/2018 7:13:33 AM

கோவை, மார்ச் 13: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம், கலெக்டர் ஹரிகரன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு திரண்டனர். மத்திய மாநில அரசில் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாதவர்கள் 38 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தும், மத்திய மாநில அரசுகளில் பணியிடம் வழங்கப்படவில்லை. ஊனமுற்றோர் ஒதுக்கீட்டில் இதுவரை காதுகேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை.

வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகளிடம் தகவல் கேட்டால், எங்களை அலைக்கழிக்கின்றனர். நாங்களும் மனிதர்கள் தான். எனவே எங்களுக்கு உரிய முறையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மத்திய மாநில அரசுகள் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் நாங்கள் எங்கள் உரிமைகளை பெற தொடர் போராட்டங்கள் நடத்தியும், இறுதியில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் பொதுச்செயலாளர் சுகுமாறன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில்,‘கருமத்தம்பட்டியில் இருந்து ேசாமனூர் வரையில் பல மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த மினிபஸ்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் முறையாக இயக்குவதில்லை. தங்களின் இஷ்டபடி மினிபஸ்களை இயக்குகின்றனர். இதனால் ஆட்டோ தொழில் பாதிக்கப்படுகிறது.

அனுமதி வாங்கிய வழித்தடத்தில் மட்டும் மினிபஸ்களை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.  புலியகுளத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மகிமைஜான், கலெக்டரிடம் அளித்த மனுவில்,‘செல்வபுரத்தில் சாலையோரம் ஆவின் பெட்டிக்கடை வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறையிடம் விண்ணப்பித்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஆவின் பெட்டி கடை வைப்பதற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். என்னுடைய வாழ்வாதாரத்திற்காக ஆவின்பெட்டிக்கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்