SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை, நீலகிரி வனத்துறையினருக்கு தீ விபத்து குறித்து பயிற்சி

3/13/2018 7:13:24 AM

கோவை, மார்ச்.13: கோவை, நீலகிரி மாவட்ட வனத்துறையினருக்கு தீ விபத்து ஏற்படும் போது உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சி கோவை மாவட்ட வன அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் தீயணைப்பு துறை அதிகாரி தவுலத் முகமது வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு துறை அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்கினார். மொத்தம் 40 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், வனத்தில் காட்டு தீ ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும். வனத்திற்குள் தீப்பிடித்தால் தண்ணீர் கொண்டு செல்ல முடியாது என்பதால் அங்குள்ள செடிகள், கொடிகளை பயன்படுத்தி எப்படி தீயை அணைக்க வேண்டும்.

தீயில் சிக்கியவர்களை எப்படி மீட்டு மலையில் இருந்து வேகமாக கீழே கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. செய்முறையாகவும் வனத்துறையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும், பிற வன ஊழியர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறுகையில், “திடீரென வனத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி உதவுவது என்பது தொடர்பாக வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிய முறையில் மலையில் இருந்து ஒருவரை விரைவாக எப்படி மீட்பது, தீயை எப்படி அணைப்பது உள்ளிட்டவை குறித்து கோவை, நீலகிரி மாவட்ட வனத்துறையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்