SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அதிகாரிகள் துணையோடு அணைப்பட்டி வைகையாற்றில் ெதாடரும் மணல் திருட்டு பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

3/13/2018 7:11:33 AM

செம்பட்டி, மார்ச் 13: அதிகாரிகள் துணையோடு நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகையாற்றில் இரவு, பகலாக தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டி வைகை ஆறு, பேரணையில் கடந்த பல ஆண்டுகளாக மணல் திருட்டு இரவு, பகலாக நடந்து வருகிறது. இதனால் பேரணையில் இருந்து திண்டுக்கல், சின்னாளபட்டி, நிலக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் எடுத்த செல்ல அமைக்கப்பட்ட உறை கிணறுகளும், குழாய்களும் சேதமடைந்து வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மேலும் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு அணைப்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிலக்கோட்டை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மேலும் இப்பகுதி மக்கள், விவசாயிகள் அணை மற்றும் சாலையோர பகுதிகளில்சமையல் செய்து சாப்பிட்டு இரவில் மணல் கொள்ளையை தடுக்க காவல் காத்தனர். அப்போது மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் வழக்கம்போல் ‘சம்திங்கை’ வாங்கி கொண்டு லாரியை அனுப்பி வைத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நிலக்கோட்டை தாசில்தார் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் தங்கள் பாணியில் ‘இனி மணல் திருட்டு நடக்காது, தீவிரமாக கண்காணிக்கப்படும்’ என சமரசம் செய்து பொதுமக்களை கலைத்து விட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைப்பட்டி வைகை பேரணை மற்றும் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் துணையுடன் மீண்டும் இரவு, பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால் அணைப்பட்டி வைகை ஆற்றுப்பகுதி காணாமல்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் அண்ணாத்துரை மற்றும் வைகை நதி பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் சுரேஷ் கூறுகையில், ‘‘ அணைப்பட்டி வைகை பேரணையில் நடக்கும் மணல் கொள்ளையால் உறை கிணறுகள், குழாய்கள் சேதமடைந்து வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் அடிக்கடி தடைபடுகிறது. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 3 ஆள் மட்டத்திற்கு குழிகள் தோண்டி மண் அள்ளுகின்றனர். இதனால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மணல் திருட்டை தடுக்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மணல் திருட்டுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் மாநிலம் தழுவிய போரட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.

கடையில் கொடுத்துட்டு போவேலை முடிஞ்சு வாங்கிக்கிறேன்மணல் திருடர்களிடம் ஒரு சில வருவாய் அதிகாரிகள் மாமூல் பணத்தை தாலுகா அலுவலம் அருகே உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, மளிகை கடை மற்றும்  ஹோட்டல்களில் கொடுக்க சொல்கின்றனர்.  பின்னர் மாலையில் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது அதை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. இந்த நூதன முறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டுபிடித்து, மணல் திருட்டை தடுக்க கலெக்டர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaipolicefunction

  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

 • railwaysecurityforce

  சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

 • courtchennaispl

  சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

 • russiapresigun

  ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

 • venkhaiahnaidu

  செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்