SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தருவதில் அலைக்கழிப்பு

3/13/2018 7:11:23 AM

மதுரை, மார்ச் 13: காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தருவதில் அலைக்கழிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு அனுவித்யா என்பவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். 90 சதவீத தீக்காயத்துடன் வந்த அவர், அவசர சிகிச்சை பிரிவில் ஸ்டிரெட்சரிலேயே வைக்கப்பட்டார். அதிகாலை 4.45 மணி வரை யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. சென்னையை சேர்ந்த இப்பெண்ணின் பெற்றோர் அருகில் இருந்தும், புதிய இடமென்பதால் உதவி கிடைக்காமல் தவித்தனர். அருகில் இருந்தவர்கள் சப்தம் போட துவங்கினர்.
உடனே சிகிச்சைக்கான பணி துவக்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, 2வது மாடியில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் இருக்கும் 301வது வார்டுக்கு அனுவித்யாவை அழைத்து செல்ல ஸ்டிரெட்சரை தள்ள யாரும் இல்லை. கடைசியில் குடும்பத்தினர் அலைந்து திரிந்து, ஒரு துப்புரவு தொழிலாளியை அழைத்து வந்து அவர் உதவியுடன், அங்கிருந்த அனைவரும் சேர்ந்து ஸ்டிரெட்சரை தள்ளிச்சென்று வார்டில் சேர்த்தனர். இதேபோல் படுகாயத்துடன் வந்த சென்ைனயை சேர்ந்த நிஷாவும் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டார். (இவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்).

அந்த பெண்ணுக்கும் இதே அவல நிலைதான் ஏற்பட்டது. 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டு, மதுரை வந்துள்ள இவர்களை உரிய முறையில் வரவேற்று, விரைந்து சிகிச்சை வழங்குவதற்கான எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. இதன்பின்னரே  மதுரை அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் வீரராகவ ராவ், ஆர்டிஓ அரவிந்தன், வடக்கு தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்டோர் வந்தனர். அதிகாரிகள் வந்தபிறகே, கவனிப்பில் கொஞ்சம் வேகம் ஏற்பட்டது. தகவல் மையம்: மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள டீன் அலுவலக நுழைவாயிலில் தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை வடக்கு துணை தாசில்தார் ரஞ்சித்குமார் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகளான சாந்தமங்கலம் வடிவேலு, குலமங்கலம் மோகன்ராஜ், வருவாய் உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் தகவல் மையத்தில் உள்ளனர். தீக்காயம்பட்டு சிகிச்சையில் இருப்போரை காண வரும் உறவினர்களுக்கு இவர்கள் மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்