SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ் கட்டண உயர்வால் ரயில் நிலையத்தில் குவியும் பயணிகள்

2/19/2018 10:25:31 AM

சிதம்பரம், பிப். 19: தமிழகத்தில் இரு மடங்கு பஸ் கட்டண உயர்வால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகளவில் மக்கள் ரயில் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.சிதம்பரத்தில் இருந்து கடலூருக்கு பஸ்சில் ரூ.29 முதல் ரூ.33 வரை பெறப்படுகிறது. இதில் தொலைதூர எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ.45 பெறப்படுகிறது. பாசஞ்சர் ரயிலில் சிதம்பரத்தில் இருந்து கடலூருக்கு ரூ.10 கட்டணமாக பெறப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.30 கட்டணமாக பெறப்படுகிறது. சிதம்பரம் வழியாக காலை மற்றும் மாலை வேளைகளில் பாசஞ்சர் ரயில் செல்வதால் மக்கள் காத்திருந்தாவது ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள்.
இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் பாசஞ்சர் ரயில் வரும் நேரங்களில் டிக்கெட் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.30 கொடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றால் அரை மணி நேரத்தில் கடலூரை அடைந்துவிடுகின்றனர். பஸ்சில் பணத்தையும் கூடுதலாக கொடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து கடலூரை அடைய வேண்டியுள்ளதாக மக்கள் புலம்புகின்றனர். எனவே, மயிலாடுதுறை-விழுப்புரம் மார்க்கத்தில் கூடுதல் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்