SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாரிசுக்கு வேலை கேட்டு 4வது நாளாக போராட்டம் இன்று மறியல் நடத்த முடிவு

2/19/2018 10:25:23 AM

நெய்வேலி, பிப். 19: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த தொழிலாளி ஜெய்குமார், கடந்த 15ம் தேதி பணியில் இருந்தபோது உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடல் என்எல்சி பொது மருத்துவமனையில் உள்ள மார்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயக்குமாரின் உறவினர்களும், கிராமமக்களும் இறந்த ஜெயக்குமாரின் வாரிசுக்கு என்எல்சியில் நிரந்தர பணி வழங்க கோரி முதல் சுரங்க விரிவாக்கத்திற்கு செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 4வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.நேற்று முன்தினம் என்எல்சி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச, சிஐடியு ஆகிய தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், நிர்வாகம் பாதிக்கப்பட்ட ஜெயக்குமாரின் வாரிசுக்கு ஒப்பந்த தொழிலாளர் பணி, ரூ.3 லட்சம் இழப்பீடு தருவதாக கூறியுள்ளது.

இதனை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை, நிரந்தர பணி வழங்கும் வரை ஜெயக்குமாரின் உடலை வாங்க மாட்டோம், போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் இன்று (19ம் தேதி) வடலூரில் அனைத்து கட்சி ஆதரவுடன் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.நேற்றுமுன்தினம் மாலை, நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் மற்றும் என்எல்சி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜெயக்குமாரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் சபா ராஜேந்திரன் எம்எல்ஏ, செய்தியாளர்களிடம் கூறுகையில், என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றிய ஜெயக்குமார் கடந்த 3 நாட்களுக்கு முன் பணியில் இருக்கும் போது இறந்துள்ளார்.

அவர் அதிக பணி சுமை காரணமாகவே இறந்துள்ளார்.இறந்த ஜெயக்குமார் குடும்பத்தினர் என்எல்சி நிறுவனத்திற்கு 100 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளனர். ஜெயக்குமார் மட்டும் 15 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளார்.இதனை நிர்வாகம் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்திற்கு நிரந்தர நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் வாரிசுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். ஆனால் என்எல்சி நிர்வாகம் இதுபோன்ற முன் உதாரணம் இல்லை என மறுத்து வருகிறது. இது குறித்து மாவட்ட அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடமும் பேசியுள்ளேன். குடும்ப தலைவரை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஜெயக்குமாரின் வாரிசுக்கு நிரந்தர பணி வழங்க என்எல்சி நிறுவனம் முன் வரவேண்டும், என்றார்.  

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்